கனமழை தொடர்வதால் தேனி மாவட்ட மலைச்சாலைகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியாளர்கள்
தொடர் மழையினால் தேனி மாவட்ட மலைச்சாலைகளில் மண், மரம், பாறைகள் சரிந்து விழுந்து வருகின்றன.
சின்னமனூர்: தொடர் மழையினால் தேனி மாவட்ட மலைச்சாலைகளில் மண், மரம், பாறைகள் சரிந்து விழுந்து வருகின்றன. இதற்காக இப்பகுதிகள் 24 மணி நேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலையடிவாரத்தில் சீரமைப்பு கருவிகளுடன், களப்பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.