விசைப்படகு மூழ்கி பரிதவித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீட்பு    

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் கனமழையால் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

விசைப்படகு மூழ்கி பரிதவித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீட்பு    

ராமேசுவரம்: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் கனமழையால் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 471 விசைப்படகுகள் நேற்று மீன்பிடிக்கச் சென்றன.

இந்நிலையில், மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவு சென்றபோது, திடீரென பலகை உடைந்து, படகுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக, மீனவர்கள் செல்போன் மூலம் கரையில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.