கீர்த்தி சுரேஷ் திருமணம்: நடிகர் விஜய் நேரில் வாழ்த்து

நடிகை மேனகா - மலையாள திரைப்பட தயாரிப்​பாளர் சுரேஷ் ஆகியோரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் திருமணம்: நடிகர் விஜய் நேரில் வாழ்த்து

சென்னை: நடிகை மேனகா - மலையாள திரைப்பட தயாரிப்​பாளர் சுரேஷ் ஆகியோரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்​களில் குழந்தை நட்சத்​திரமாக நடிக்கத் தொடங்கிய அவர், ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுக​மானார். தொடர்ந்து, ரஜினி முரு​கன், பைரவா, சர்க்​கார், ரெமோ, அண்ணாத்த, ரகு தாத்தா உட்பட பல படங்​களில் நடித்​துள்ளார். நடிகை சாவித்​திரி​யின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்​கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்​துக்காக தேசிய விருது பெற்​றார்.

இதற்​கிடையே, இவர் தனது பள்ளி நண்பர் ஆன்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டு​களாக காதலித்து வந்தார். இவர்​களது காதலுக்கு இரு வீட்​டாரும் சம்மதம் தெரி​வித்ததை அடுத்து, திரு​மணம் நிச்​ச​யிக்​கப்​பட்​டது. அதன்​படி, ஆன்டனி தட்டில் - கீர்த்தி சுரேஷ் திரு​மணம் கோவா​வில் நேற்று காலை 9.40 மணிக்கு நடந்​தது. இதில் நெருங்கிய உறவினர்​கள், நண்பர்கள் கலந்து கொண்​டனர். இந்த திரு​மணத்​துக்காக கோவா சென்​றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், மணமக்களை வாழ்த்​தினார். இந்த பு​கைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகின்​றன.