குமரியில் ஊர் பெயரில் சர்ச்சை: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
குமரியில் ஊர் பெயர் சர்ச்சை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: குமரியில் ஊர் பெயர் சர்ச்சை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்திக்காட்டுவிளை என்னும் கிராமம் உள்ளது. ஊரின் பெயரை மாற்றுவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்த நிலையில் 1988ம் ஆண்டு நீதிமன்றம் ஆத்திக்காட்டுவிளை எனும் பெயரை மாற்றக்கூடாது என்றும், அவ்வாறு எழுதப்பட்டுள்ள வேறு பெயர்களை மாற்றி ஆத்திக்காட்டுவிளை என்றே ஆவணங்களில் பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.