திண்டுக்கல் தொழிலதிபர் அலுவலகத்தில் அமலாக்க துறை திடீர் சோதனை
திண்டுக்கல் ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டு காரில் மொத்தம் 8 பேர் சிஆர்பிஎஃப் போலீஸாருடன் வந்து அலுவலக கதவை மூடிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக பாதுகாவலர்களைத் தவிர யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தனர். பூட்டப்பட்டிருந்த அறைகளின் சாவிகளை வாங்கி திறந்தும் ஆய்வு மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் ரத்தினம் அலுவலகத்தில் அமலாக்க துறை சோதனை நடப்பது இது மூன்றாவது முறையாகும்.