“ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல்: “தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பிள்ளையார்நத்தத்தில் சனிக்கிழமை (நவ.23) நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல், இந்த 2 கட்சிகளாலும் வெற்றி பெற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தது குறித்து பதில் சொல்ல முடியாது.