கூடலூர் அருகே 2 புலிகள் உயிரிழப்பு: வனத்துறையினர் தீவிர விசாரணை
கூடலூர் அருகே இரண்டு புலிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
கூடலூர்: கூடலூர் அருகே இரண்டு புலிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் உள்ள சசக்ஸ் என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில் ஒரு புலி குட்டி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பிதர்காடு சரகர் ரவி மற்றும் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 4 வயது ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அந்தப் பகுதியை சுற்றி வனத்துறையினர் ஆய்வு செய்தபோது குட்டி இறந்த இடத்திலிருந்து 75 மீட்டர் தூரத்தில் எட்டு வயது பெண் புலி ஒன்றும் இறந்து கிடந்தது.
வனத்துறையினர் புலிகளின் உடலை ஆய்வு செய்தபோது இரண்டு புலிகளின் உடலில் காயங்கள் இருந்தன முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் அங்கு வந்து இரண்டு புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை ரசாயன பரிசோதனைக்காக சேகரித்தார் .இது குறித்து வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் பிரபு கூறும் போது, “இறந்த புலிகள் இரண்டும் தாய் மற்றும் குட்டியாக இருக்கலாம். புலிகளின் உடல்களில் காயங்கள் இருந்தன.