“கூட்டணி கட்சித் தலைவர்களை புறம்தள்ளுகிறார்கள்” - தவாக தலைவர் வேல்முருகன் ஆதங்கம்

“ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள், தேர்தல்‌ முடிந்தவுடன் ‘ப்ரோடோகால்’ என ஒதுக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

“கூட்டணி கட்சித் தலைவர்களை புறம்தள்ளுகிறார்கள்” - தவாக தலைவர் வேல்முருகன் ஆதங்கம்

கடலூர்: “ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள், தேர்தல்‌ முடிந்தவுடன் ‘ப்ரோடோகால்’ என ஒதுக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எப்போதெல்லாம் தமிழகத்தில் பேரிடர் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பாதிக்கப்படும் இடம் கடலூர். சாத்தனூர் அணை திறப்பால் எனது தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப அட்டைக்கு வெறும் ரூ.2 ஆயிரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதையும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவில்லை.