கோவையில் கொடிநாட்டப் போவது யார்? - முட்டி மோத தயாராகும் முப்பெரும் தலைகள்!

அரசியல் தலைநகரான சென்னையை விட தொழில் நகரமான கோவைதான் இப்போது அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் ஒரே குறியாக இருக்கிறது. காரணம், தொடர்ச்சியாக கோவை, அதிமுகவின் கோட்டையாக இருப்பது தான்.

கோவையில் கொடிநாட்டப் போவது யார்? - முட்டி மோத தயாராகும் முப்பெரும் தலைகள்!

அரசியல் தலைநகரான சென்னையை விட தொழில் நகரமான கோவைதான் இப்போது அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் ஒரே குறியாக இருக்கிறது. காரணம், தொடர்ச்சியாக கோவை, அதிமுகவின் கோட்டையாக இருப்பது தான். கடந்த 3 சட்டப் பேரவைத் தேர்தல்​களில் கோவை மாவட்​டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி​களில் பெரும்​பாலான தொகுதிகளை தொடர்ச்​சியாக தக்கவைத்து வருகிறது அதிமுக. இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதில் திமுக இம்முறை அதிக முனைப்பு காட்டுகிறது.

அதற்காக கோவைக்கு சிறப்பு கவனமெடுத்து திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தான் நினைத்ததை சாதிப்​ப​தற்காக கூடுதல் பலமாக அமைச்சர் செந்தில் பாலாஜி​யிடம் தேர்தல் களப் பணியை ஒப்படைத்​திருக்​கிறார் ஸ்டாலின். தேர்தல் ‘தந்திர’ வித்தைகளை திறம்படக் கற்ற செந்தில் பாலாஜியின் வியூகங்கள் இம்முறை கோவை மாவட்​டத்தில் திமுக​வுக்கு கணிசமான எம்எல்​ஏ-க்​களைப் பெற்றுக் கொடுக்கும் என்பது திமுக தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கேற்ப பாலாஜியும் இப்போதே மிக நுணுக்கமாக தேர்தல் வேலைகளை தொடங்கி​விட்​டார்.