வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கண்டெடுப்பு

விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை: விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில், சேதமடைந்த சுடுமண்ணாலான உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச்சில்லு, தங்கமணிகள் என‌ 2,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.