சட்டப்பேரவை இன்று கூடுகிறது: டங்ஸ்டன் விவகாரத்தில் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கு கிறது. இதில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வது தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: டங்ஸ்டன் விவகாரத்தில் தீர்மானம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கு கிறது. இதில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வது தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.