கோவை மலைக் கிராமங்களில் சட்டவிரோத செம்மண் திருட்டு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

கோவை மாவட்ட மலைக்கிராமங்களில் சட்டவிரோதமாக செம்மண் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ போன்ற  புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும், என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோவை மலைக் கிராமங்களில் சட்டவிரோத செம்மண் திருட்டு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: கோவை மாவட்ட மலைக்கிராமங்களில் சட்டவிரோதமாக செம்மண் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும், என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவுக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை போன்ற கிராமங்களில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே முறையீடு செய்திருந்தார். அதன்படி நீதிபதிகள், இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தனர்.