சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் - அதிகாரிகள் ஆய்வு

கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் நீர் வரத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் - அதிகாரிகள் ஆய்வு

வத்திராயிருப்பு: கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் நீர் வரத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து தாணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை, மலட்டாறு, அத்தியுத்து, சங்கிலிபாறை ஆகிய ஓடைகளை கடந்து சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். சதுரகிரி மலையில் 2015-ம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின், அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.