சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழக - கேரள எல்லையில் தகவல் மையம் திறப்பு

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகம்-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக தமிழக - கேரள எல்லையில் தகவல் மையம் திறப்பு

நாகர்கோவில்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தமிழகம்-கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து செல்வது வழக்கம். கார்த்திகை மாதம் 1-ம் தேதியில் இருந்து நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.