சவுபின் சாஹிருக்கு போலீஸ் சம்மன்
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றது.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றது. இதைப் பரவா பிலிம்ஸ் சார்பில் நடிகர் சவுபின் சாஹிர், பாபு சாஹிர், ஷான் ஆண்டனி இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் லாபத்தில் 40 சதவிகித பங்கு தருவதாகக் கூறி, தரவில்லை என்றும் சிராஜ் என்பவர் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், நிதி மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் கருப்புப் பணம் முதலீடு செய்யப் பட்டிருப்பதாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து அவர்களும் விசாரணை நடத்தினர்.