சிஎன்ஜி பேருந்துகளால் ஒரு மாதத்தில் ரூ.7.67 லட்சம் சேமிப்பு: தமிழக அரசு தகவல்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.7.67 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.7.67 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயுக்கள் மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.