“சிஎம் செல்லுக்கு மனுவே வரக்கூடாது!” - அதிகாரிகளுக்கு ‘ஆக் ஷன் கொக்கி’ போடும் உதயநிதி

பொதுவாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினால் அதிகாரிகள் தங்கள் மீது எந்தக் குறையும் வராத அளவுக்கு அனைத்தையும் ‘செட் செய்து’ வைத்துவிடுவார்கள். இதன் மூலம் பிரச்சினையின் நிஜ நிலவரம் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும்.

“சிஎம் செல்லுக்கு மனுவே வரக்கூடாது!” - அதிகாரிகளுக்கு ‘ஆக் ஷன் கொக்கி’ போடும் உதயநிதி

பொதுவாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினால் அதிகாரிகள் தங்கள் மீது எந்தக் குறையும் வராத அளவுக்கு அனைத்தையும் ‘செட் செய்து’ வைத்துவிடுவார்கள். இதன் மூலம் பிரச்சினையின் நிஜ நிலவரம் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஆனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் அப்படியான செட்டப்ஸீன்களை எல்லாம் தவிடுபொடி ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஆய்வுக்​கூட்டம் நடத்தும் மாவட்​டங்​களுக்கு மூன்று நாட்கள் முன்ன​தாகவே அதிகாரிகள் குழு ஒன்று களத்தில் இறங்கி ரகசியமாக ஆய்வு நடத்து​கிறது. இவர்கள் தரும் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டு ஆய்வுக் கூட்டத்தில் அமர்கிறார் உதயநிதி. இது தெரியாமல் அதிகாரிகள் யாராவது உண்மை நிலவரத்தை மறைத்து பதிலளித்​தால், தன்னிடம் உள்ள தரவுகளை எடுத்துப் போட்டு திகைக்க வைக்கிறார் உதயநிதி.