சிவகார்த்திகேயனின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு தொடக்கம்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில் சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (டிச.14) முதல் சென்னையில் தொடங்கி இருக்கிறது.