செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதில் தவறில்லை: சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதில் தவறில்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதில் தவறில்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த முறை ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்பின்போது வழக்கமாக வழங்கப்படும் பேரிடர் நிதியைத்தான் மத்திய அரசு விடுவித்ததே தவிர, கூடுதலாக விடுவிக்கவில்லை. இந்த முறையாவது தமிழக முதல்வர் கோரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு விடுவிக்கும் என்று நம்புகிறோம்.