ஜாகிர் உசேன் மறைவு: மகாராஷ்டிரா ஆளுநர், கேரள முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல்
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.