ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?
சுயமரியாதை என்ற சொல்லையே தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார். இன்று அரசியலில் நிகழும் அழித்தொழிப்புகள், அவர் கொள்கைக்கு எதிரானது.
பெரியார் தனிநபர் வழிபாட்டின் தொடக்கம் என்று எழுதுவது வரலாற்றுக்குப் புறம்பானது.
திருநாவுக்கரசு எழுதிய ‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா!’ கட்டுரை வாசித்தேன். “சுயமரியாதை அழித்தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம், பெரியார் உருவாக்கி வளர்த்த சுயமரியாதை இயக்கத்திலும் திராவிடர் கழகத்திலும் இருக்கிறது” என்கிறது கட்டுரை. அந்த வகையில், ‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா!’ என்கிறது. சரியான பார்வையா இது?