எழுத்துக்குச் சாதி அடையாளம் தேவையா?
பல தளங்களில் கிளைவிட்டுப் படரும் தலித் இலக்கிய வளர்ச்சி சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக எழுச்சி கொண்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் அசலான வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் கிளர்ந்தெழுந்தவை தலித் இலக்கியங்கள். கவிதைகள், நாவல்கள், சுயசரிதைகள் எனப் பல தளங்களில் கிளைவிட்டுப் படரும் தலித் இலக்கிய வளர்ச்சி சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக எழுச்சி கொண்டுள்ளது.
தலித் இலக்கிய வளர்ச்சியுடன் தொடர்புகொண்ட எழுத்தாளர்கள் பங்கேற்புடன் தலித் இலக்கியத்தின் வளர்ச்சியை விவாதிக்கும் வகையில் கருத்துப் பட்டறை ஒன்றை ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனமும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தின. அக்டோபர் 30, 31-ம் தேதிகளில் பெரும்புதூரில் இந்தக் கருத்துப் பட்டறை நடைபெற்றது.