‘தமிழகத்தில் புயல், கனமழையால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பயிர் சேதம்’
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.