திரு, உயர்திருவையும் தாண்டி கவுரவிக்கிறது ‘தமிழ் திரு’ விருது!
‘இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில்
சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு' விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இந்து தமிழ் திசை - யாதும் தமிழே 2023' விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார்.
விழாவின் சிறப்பம்சமாக, தங்கள் செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகத்தை செழுமைப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற கல்விச் செயற்பாட்டாளரும், பெண்ணுரிமைப் போராளியுமான பேராசிரியர் வே.வசந்தி தேவி, திரைப்பட வரலாற்று ஆய்வாளரும், சுற்றுச்சூழல் எழுத்தாளருமான சு.தியடோர் பாஸ்கரன், கரிசல் வட்டார எழுத்தாளர் மு.சுயம்புலிங்கம், அறிவியலாளர் என்.கலைச்செல்வி ஆகிய 4 பேருக்கு ‘தமிழ் திரு' விருதுகளையும், நாட்டியக் கலைஞரும், திரைக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு ‘தமிழ் திரு’ வாழ்நாள் சாதனையாளர் விருதையும், ‘தி இந்து' குழும இயக்குநர் விஜயா அருண், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் ஆகியோர் வழங்கினர். ஐவருக்கும் விருதுகளோடு ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் பேசியது: