துணிச்சல்மிக்க அரசியல்வாதி ஈவிகேஎஸ் இளங்கோவன்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், ‘அவர் மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல்மிக்க அரசியல்வாதி; என தெரிவித் துள்ளனர்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், ‘அவர் மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல்மிக்க அரசியல்வாதி; என தெரிவித் துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.