துணை முதல்வர் உத்தரவிட்டும் பழங்குடியினரை பாதுகாக்க தவறும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு பகுதியில், ஏராளமான இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு பகுதியில், ஏராளமான இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பழங்குடியினர் நலத்திட்டத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காரைத்திட்டு பாலாற்றின் முகத்துவாரத்தின் மிக அருகே பாலாற்றங்கரையோரத்தில் உள்ள பனைமரங்களுக்கு நடுவே, 40-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைத்து இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
குடிசைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி பாலாற்றில் அதிகளவில் நீரோட்டம் ஏற்படும்போது வெள்ளத்தில் மூழ்கும் பகுதியாக உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருவது அசம்பாவிதங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால், அவர்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.