தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

தூத்துக்குடி/ கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இதுமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென் தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும்.

இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.