நடிகர், நடிகைகள் சம்பளம்: ஷர்மிளா தாகூர் கவலை
பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘குல்மொஹர்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்.
பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘குல்மொஹர்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். அடுத்து பெங்காலி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்றைய காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் அதிகமாகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் படப்பிடிப்பில் அவர்களுக்கான பிற செலவுகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் தங்களுடன் சமையல்காரர்கள், மசாஜ் செய்பவர்கள் என முழு பரிவாரங்களுடன் படப்பிடிப்புகளுக்கு வருவது கவலையளிக்கிறது. சமீபத்தில் விளம்பர படம் ஒன்றுக்காக எனக்கு ஒப்பனை செய்தவர், ‘நடிகர், நடிகைகள், தங்களுக்கான ‘வேனிட்டி வேனி’ன் அளவுக்காக சண்டையிடுகிறார்கள்’ என்று சொன்ன தகவல் ஆச்சரியப்படுத்தியது.