நமது தொன்மக் கதைகளை படமாக்க வேண்டும்: நாசர்
சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்கிறது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்கிறது.
சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்கிறது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்கிறது. ஆதரவற்ற குட்டியான முஃபாசாவையும், அரச குடும்பத்தின் வாரிசான டாக்கா எனப்படும் அன்பான சிங்கத்தையும் சுற்றி இதன் கதைப் பின்னப்பட்டுள்ளது.
இதில் முஃபாசா கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ், ‘டாக்கா’வுக்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளனர். ரோபோ சங்கர், சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்புக்கு விடிவி கணேஷ் மற்றும் கிரோஸுக்கு நாசர் குரல் கொடுத்துள்ளனர்.