“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்...” - தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

நாங்கள் ஒன்றும் பரம எதிரிகள் கிடையாது. எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே, எப்படி எல்லாம் மாறியது என்று தெரியவில்லை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவருக்கென்று சில காரணங்கள் இருக்கலாம். அதைப் போல எனக்கும் சில காரணங்கள் இருந்தது என்று தனுஷ் உடனான பிரச்சினை குறித்து நடிகை நயன்தாரா மனம் திறந்துள்ளார்.

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்...” - தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

சென்னை: “நாங்கள் ஒன்றும் பரம எதிரிகள் கிடையாது. எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே, எப்படி எல்லாம் மாறியது என்று தெரியவில்லை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவருக்கென்று சில காரணங்கள் இருக்கலாம். அதைப் போல எனக்கும் சில காரணங்கள் இருந்தது” என்று தனுஷ் உடனான பிரச்சினை குறித்து நடிகை நயன்தாரா மனம் திறந்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நயன்தாரா பேசியதாவது: “எனக்கு சரியென்று நினைக்கும் ஒரு விஷயத்தை செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும்? நான் தவறாக எதையாவது செய்தால்தானே பயப்பட வேண்டும்? பப்ளிசிட்டிக்காக ஒருவரது இமேஜை அழிக்கும் ஆள் நான் அல்ல. படத்தின் விளம்பரத்துக்காகவும் நான் அப்படி செய்யவில்லை. அது என்னுடைய நோக்கமே கிடையாது. அவரது நண்பர்கள், மேனேஜர் ஆகியோருக்கு ஏராளமான முறை தொலைபேசியில் அழைத்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் எழுதிய நான்கு வரிகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்த விரும்பினோம். அது எங்களுக்கு மிகவும் பெர்சனலான ஒன்றாக இருந்தது. அது இந்த ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்பினோம்.