‘புஷ்பா 2’ பயணம் நிறைய அனுபவத்தை கொடுத்தது: சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி
‘புஷ்பா 2’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தப் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்ததாகவும் படத்துக்கு பின்னணி இசையமைத்த சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தப் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்ததாகவும் படத்துக்கு பின்னணி இசையமைத்த சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாம் சி.எஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புஷ்பா 2 உடனான எனது பயணம் மிகப்பெரியது. பின்னணி இசைக்காக என்னை தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் ஆதரவு இல்லாவிட்டால் இது நடந்திருக்காது.