‘இது 15 ஆண்டு உறவு...’ - காதலர் ஆண்டனி குறித்து கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தன் காதலரின் பெயரையும், காதலையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தன் காதலரின் பெயரையும், காதலையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ஆண்டனியுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் சூரியனை பார்த்தவாறு பின்புறமாக திரும்பி நின்றுகொண்டிருக்கின்றனர். இதனை பகிர்ந்துள்ள கீர்த்தி, “15 ஆண்டு கால உறவு. எப்போதும் தொடரும். ஆண்டனி - கீர்த்தி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.