ஆவிகள் பற்றிய கதையில் யோகிபாபு
பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஸ்கூல்’. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை குவாண்டம் பிலிம் பேக்டரி சார்பில் வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ளார்.
பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஸ்கூல்’. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை குவாண்டம் பிலிம் பேக்டரி சார்பில் வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ளார். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி வித்யாதரன் கூறும்போது, “இது உளவியல் த்ரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவர்களின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை ஆராயும் விதமாகத் திரைக்கதையை அமைத்துள்ளோம். மனித உயிரின் பிரயாணம், ஆவிகள், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் தீவிரமாக சொல்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு இளையராஜா இசையமைக்க சம்மதித்தார்” என்றார்.