‘சிவகார்த்திகேயன் 25’-ல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது

‘சிவகார்த்திகேயன் 25’-ல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்துவருகிறார். இதை யடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன்.

அவரது 25-வது படமான இதில் ஜெயம் ரவி வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்கின்றனர். அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.