நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தை சூழ்ந்துள்ள அந்நிய தாவரங்கள் அகற்றும் பணி தீவிரம்
பாரம்பரிய சின்ன அந்தஸ்தை பாதுகாக்க, நீலகிரி சோலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முன்னதாக, 1840-லிருந்து நீலகிரி மாவட்டத்தில் கற்பூரம், சீகை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப் பட்டன.
உதகை: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உலகிலுள்ள 14 முக்கிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்று. இதனால், 1986-ம் ஆண்டு நீலகிரியை உயிர்ச் சூழல் மண்டலமாக யுனெஸ்கோ அங்கீகரித் ததுடன், 2012-ம் ஆண்டு பாரம்பரிய சின்னமாகவும் அறிவித்தது.
இதையடுத்து, பாரம்பரிய சின்ன அந்தஸ்தை பாதுகாக்க, நீலகிரி சோலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முன்னதாக, 1840-லிருந்து நீலகிரி மாவட்டத்தில் கற்பூரம், சீகை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப் பட்டன. மக்களின் எரிவாயு தேவைக்கு, சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கற்பூரம் மற்றும் சீகை மரங்கள் வளர்க்கப் பட்டன.