நெல்லை மாநகரை கதிகலங்க வைத்த மழை வெள்ளம் - அதிக பாதிப்புக்கு காரணம் என்ன?

திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப்போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நெல்லை மாநகரை கதிகலங்க வைத்த மழை வெள்ளம் - அதிக பாதிப்புக்கு காரணம் என்ன?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப்போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள ஊத்து பகுதியில் 540 மி.மீ. மழை பெய்திருந்தது.

மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):அம்பாசமுத்திரம்- 366, கன்னடியன் அணைக்கட்டு- 351, காக்காச்சி- 350, மாஞ்சோலை- 320, நாலுமுக்கு- 310, மணிமுத்தாறு- 298, பாளையங்கோட்டை- 261, சேர்வலாறு அணை- 237, சேரன்மகாதேவி- 225, பாபநாசம்- 221, களக்காடு- 155, திருநெல்வேலி- 132, நாங்குநேரி- 110, மூலைக்கரைப்பட்டி- 84, கொடுமுடியாறு அணை- 74, நம்பியாறு அணை- 53, ராதாபுரம்- 33.