பாலிவுட்டில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகம்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
டிசம்பர் 27-ம் தேதி சல்மான் கான் தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் அவர் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘சிக்கந்தர்’ டீசருக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவரே படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்படுவாரா அல்லது டீசருக்கு மட்டும் அவரது இசையினை உபயோகிக்க இருக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.