‘புதிய பாதை’ ஆன ‘ஏக்-கி-ரஸ்தா’
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், இந்தி நடிகர் திலீப் குமார் உட்பட அந்த கால டாப் ஹீரோக்கள் பலரை இயக்கியவர்களில் ஒருவர் தாபி சாணக்கியா.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், இந்தி நடிகர் திலீப் குமார் உட்பட அந்த கால டாப் ஹீரோக்கள் பலரை இயக்கியவர்களில் ஒருவர் தாபி சாணக்கியா. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒளி விளக்கு’, ‘புதிய பூமி’, சிவாஜியின் ‘வாணி ராணி’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். (இவர் தந்தை, தாபி தர்மராவ் சாகித்ய அகாடமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர். சில தெலுங்கு படங்களுக்குக் கதை வசனமும் பாடல்களும் எழுதியிருக்கிறார்)
தாபி சாணக்கியா, தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இயக்கிய படம் ‘புதிய பாதை’. தெலுங்கில் இதற்கு ‘குங்குமரேகா’ என்ற தலைப்பு வைத்திருந்தனர். இந்தியில் பி.ஆர்.சோப்ரா இயக்கத்தில் அசோக் குமார், சுனில் தத், மீனா குமாரி நடித்து வெளியான ‘ஏக்- கி- ரஸ்தா’ என்ற படத்தின் ரீமேக் இது.