புதுச்சேரியில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய டிச.8-ல் மத்தியக் குழு வருகை
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்களை மத்தியக் குழு இம்மாதம் 8, 9-ல் ஆய்வு செய்கிறது. இதற்காக துறைரீதியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்களை மத்தியக் குழு இம்மாதம் 8, 9-ல் ஆய்வு செய்கிறது. இதற்காக துறைரீதியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி பெய்த அதி கனமழையால் ஏராளமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. பயிர்கள் சேதமடைந்தன. கனமழையால் 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்நிலையில், புதுவை அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் டெல்லியில் இருந்து புதுச்சேரியில் ஆய்வு நடத்த மத்திய இணைச் செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில் மத்திய குழு புதுச்சேரிக்கு வருகிறது.