புதுச்சேரியில் 2-ம் நாளாக மத்திய குழுவினர் ஆய்வு - பெண்கள் கண்ணீருடன் முறையீடு
புதுச்சேரியில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மத்திய குழுவினர் இரண்டாம் நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பெண்கள் கண்ணீருடன் முறையிட்டனர்
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மத்திய குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் (டிச.9) ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் பெண்கள் கண்ணீருடன் முறையிட்டனர்.
புதுச்சேரியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரே நாளில் 48.4 செமீ மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது. இச்சூழலில் தமிழகத்தின் சாத்தனூர், வீடூர் அணைகளின் உபரிநீர் திறப்பால், புதுச்சேரி பகுதி தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.