ராமநாதபுரத்தில் மேகவெடிப்பு: ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, அந்த மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, அந்த மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமையும் அப்பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் தென் மாவட்டங்களில் அதிகனமழையாக பெய்தது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் தாலுகாக்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்துள்ளது.