“மின்மாற்றி வாங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை” - அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்மாற்றி வாங்கியதில் எந்த வித தவறுகளும் நடைபெறவில்லை என கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (நவ.20) செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவை: மின்மாற்றி வாங்கியதில் எந்த வித தவறுகளும் நடைபெறவில்லை என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவையில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டப்பணி, மாதிரிப் பள்ளிக்கான விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவ.20) ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திட்டப்பணிகள் குறித்து தெரிவித்தார். தொடர்ந்து மின்மாற்றி வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பாகவும், நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.