புயல், மழை பாதிப்புக்கான நிவாரணம், இழப்பீட்டை உயர்த்துக: அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

புயல் மழையால் பாதிக்​கப்பட்ட கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த குடும்​பங்​களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புயல், மழை பாதிப்புக்கான நிவாரணம், இழப்பீட்டை உயர்த்துக: அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: புயல் மழையால் பாதிக்​கப்பட்ட கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த குடும்​பங்​களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​:

பாமக நிறு​வனர் ராமதாஸ்: சென்னை​யில் கடந்த ஆண்டு ‘மிக்​ஜாம்’ புயலின்​போது ரூ.6,000 இழப்​பீடு வழங்​கப்​பட்ட நிலை​யில், அவர்களை விட மிக மோசமான பாதிப்பு​களுக்கு உள்ளான கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே வழங்​கப்​படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதி​யானது. அனைவருக்​கும் குறைந்தது ரூ.10,000, சேதமடைந்த நெற்​ப​யிர்​களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்​பீடு வழங்க வேண்​டும்.