புயல் மீட்பு பணிகளை ‘இடைத்தேர்தல்’ பாணியில் அரசு செய்யாதது ஏன்? - விசிக கேள்வி
புயல் மீட்பு பணிகளை இடைத்தேர்தல் பாணியில் அரசு இயந்திரம் ஏன் ஒருங்கிணைக்கவில்லை என்று விசிக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: புயல் மீட்பு பணிகளை இடைத்தேர்தல் பாணியில் அரசு இயந்திரம் ஏன் ஒருங்கிணைக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மேற்கொள்ளாதது வருத்தத்துக்குரியது. அதேநேரம், மோசமான இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலம் முறையான கட்டமைப்பு வசதிகளையும் மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறை திட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் அதற்கு அரசு காரணங்களை மட்டும் சொல்வதுமே வாடிக்கையாக உள்ளது.