‘புஷ்பா 2’ தயாரிப்பாளர்களுக்கு கர்னி சேனா அமைப்பு மிரட்டல்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தை சுகுமார் இயக்கியுள்ளார்.

‘புஷ்பா 2’ தயாரிப்பாளர்களுக்கு கர்னி சேனா அமைப்பு மிரட்டல்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உட்பட பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இதில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற அதிகாரியாக ஃபஹத் ஃபாசில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஷெகாவத் சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக ‘புஷ்பா 2’ படத் தயாரிப்பாளர்களுக்கு ஷத்ரிய கர்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து இவ்வமைப்பின் தலைவர் ராஜ் ஷெகாவத் என்பவர் கூறும்போது, “கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திரையுலகம் பல ஆண்டுகளாக ஷத்ரியர்களை இழிவுபடுத்தி வருகிறது. இப்போது ஷெகாவத் சமூகத்தை இழிவு படுத்தி இருக்கிறது. ஷெகாவத் என்ற வார்த்தையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இல்லை என்றால் கர்னி சேனா அமைப்பு தயாரிப்பாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும். தேவைப்பட்டால், எந்த எல்லைக்கும் செல்லும்” என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.