மஞ்ஞும்மல் பாய்ஸ் முதல் ஏஆர்எம் வரை: மலையாள ரூ.100 கோடி க்ளப் படங்கள் | Year Ender 2024

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு வசூல், விமர்சன ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. வருடத்துக்கு வருடம் வசூல் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ரூ.200 கோடி வசூலை நுகர்ந்திருக்கிறார்கள் சேட்டன்கள்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் முதல் ஏஆர்எம் வரை: மலையாள ரூ.100 கோடி க்ளப் படங்கள் | Year Ender 2024

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மலையாள சினிமாவுக்கு 2024-ம் ஆண்டு வசூல், விமர்சன ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. மாலிவுட்டில் வருடத்துக்கு வருடம் வசூல் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ரூ.200 கோடி வசூலை நுகர்ந்திருக்கிறார்கள் சேட்டன்கள். அந்த வகையில் 2024-ல் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தப் படங்கள் குறித்து பார்ப்போம்.

மஞ்ஞும்மல் பாய்ஸ்: ரூ.20 கோடி பட்ஜெட்டை வைத்து ரூ.200 கோடியை வசூலிப்பதற்கு எல்லை தாண்டிய ஆதரவு மிக முக்கியம். அப்படியான ஓர் ஆதரவுக் கரத்தை சுபாஷாக குழியில் சிக்கியிருந்த மலையாள சினிமாவுக்கு, குட்டனாக இருந்து கைகொடுத்தவர்கள் தமிழ் ரசிகர்கள். பாதிக்கு பாதி வசூலில் பங்களித்தவர்கள் தமிழ் ரசிகர்கள். இளையராஜா இசையில் ‘குணா’ பாடலை ‘வைப்’ செய்ய கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படையெடுத்தார்கள். அதன் விளைவு படம் மொத்தமாக ரூ.240 கோடியை வசூலித்தது. சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார்.