மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027 பிப்ரவரிக்குள் முடிக்க இலக்கு!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பிப்ரவரி 2027-ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பிப்ரவரி 2027-ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ-ல் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸின் கட்டுமான ஒப்பந்தத்தின்படி தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.