மாணவரணி செயலாளர் முதல் மத்திய இணையமைச்சர் வரை... ஈவிகேஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளக்கோவன் உடல்நலக்குறைவால் இன்று (டிச.14) சென்னையில் காலாமானார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று (டிச.14) சென்னையில் காலாமானார்.
குடும்ப பின்னணி: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) இருந்தார். அவர் சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பெரியாரின் பேரனான இளங்கோவனின் தந்தை ஈ.வே.கி.சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத். இவரது மனைவி வரலட்சுமி இளங்கோவன், மகன்கள் திருமகன் ஈவெரா (மறைவு), சஞ்சய் சம்பத். பி.ஏ.பொருளாதார பட்டப்படிப்பு படித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் மாணவரணி செயலாளர், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு நகர காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.