முடிதிருத்தும் கட்டணம் ரூ.10 உயர்வு: பெரு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுகோள்

தமிழ்​நாடு பாரம்​பரிய மருத்​துவர் சமூகம் மற்றும் முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக் கூட்டம் சென்னை​யில் நடைபெற்​றது.

முடிதிருத்தும் கட்டணம் ரூ.10 உயர்வு: பெரு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுகோள்

சென்னை: தமிழ்​நாடு பாரம்​பரிய மருத்​துவர் சமூகம் மற்றும் முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக் கூட்டம் சென்னை​யில் நடைபெற்​றது. இதில் சங்கத்​தின் மாநிலத் தலைவர் ப.நட​ராஜன் பாரதி​தாஸ், செயலாளர் கே.செல்​லப்​பன், பொருளாளர் டி.சர​வணன், ஒருங்​கிணைப்​பாளர் எஸ்.ஜெய்​சங்​கர், அமைப்புச் செயலாளர் பி.சுரேஷ் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர்.

அதில் கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்​ட​வற்றின் உயர்வு குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இதையடுத்து, தமிழகம் முழு​வதும் முடி​திருத்​துதல் உள்ளிட்​ட​வற்றுக்கான குறைந்​த​பட்ச கட்ட​ணத்​தில் ரூ.10 உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டது.