மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: விசாரணை நடத்த தேமுதிக கோரிக்கை
கடந்த டிசம்பர் 19-ம் தேதி மாலை திடீரென பங்கர் டாப், அந்த அமைப்புடன் சரிந்து கீழே விழுந்துள்ளது. அதனுடன் 350 டன் நிலக்கரி குவியல் கொட்டியதில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் பழைய அனல்மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 3-வது யூனிட்டுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பும் ‘பங்கர் டாப்’ எனும் நிலக்கரியை அரவைக்கு முன்பு சேகரிக்கும் இடம் தரை மட்டத்தில் இருந்து 100 அடிக்கு மேல் உள்ளது.